ஆம் நான் புகைப்பதை நிறுத்தி 120 மணி நேரங்களை கடந்து விட்டேன்
ஆம் நான் புகைப்பதை நிறுத்தி 120 மணி நேரங்களை கடந்து விட்டேன்
ஆச்சிரியம்தான் அதிசயம் தான் நான் சாதித்து விட்டேன், ஆம் நான் புகைப்பதை நிறுத்தி 120 மணி நேரங்களை கடந்து விட்டேன் எனக்கு புகை பிடிக்க வேண்டும் என்ற ஊந்துதல் இப்பொழுது எல்லாம் எழுவதே இல்லை , ஆரம்பத்தில் முதல் நாள் மறுநாளில் புகை பிடிக்க வேண்டும் என்ற ஆவல் அல்லது ஊந்துதல் இப்பொழுது எனக்கு ஏற்படுவதில்லை..எப்படி நான் முதல் பீடியை தொட்டேனோ அதே போல் தான் நான் கடைசி சிகரெட்டையும் விட்டேன் . எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது எனக்கு 15 வயது இருக்கும் போது விளையாட்டு தனமாக ஆரம்பித்த இந்த பழக்கம்
38 வயதில் முடிவுக்கு வந்து இருக்கிறது , நான் இந்த பழக்கத்தை விடணும் என்று முடிவெடுத்தேன் விட்டு வீட்டேன்!.ஏனென்றால் எனது ஆரோக்கியம் எனக்கு மட்டும் சொந்தம் அல்ல எனது குடுபத்திற்கும் சேர்த்து தான் .
நான் ஆரோக்கியமாக இருந்தால் தான் எனது குடும்பம் செழிக்கும் இல்லையென்றால் ?..
சிகரெட்டை விட்டது ஒன்றும் எனக்கு சிரமமாக தெரியவில்லை விட்டதனால் கிடைத்த பலன்கள் தான் ஏராளம்
புகைப்பது என்பது என்பது எப்படி நமது முடிவுக்கு உட்பட்டதோ அதே போல் தான் புகைப்பதை நிறுத்துவது !.
விடவேண்டும் என்று நான் முடிவெடுத்த பின்பு யார் என்னை தடுக்க முடியும் இதோ நான் புகைப்பதை நிறுத்தி விட்டேன்
எனக்கு இப்போது எல்லாம் நிறைய பசி எடுக்கிறது , நல்ல ருசியான உணவை விரும்ம்பி சாப்பிடுகிறேன், எனக்கு புகைப்பதை நிறுத்தும் என்ன கொடுத்த கடவுளுக்கு நன்றி ,
நான் தொடர்ந்து எழுத போகிறேன் எனது அனுபவத்தை! புகைப்பதை நிறுத்தியதால் கிடைத்த அனுபவத்தை
ஆம் நான் புகைப்பதை நிறுத்தி 120 மணி நேரங்களை கடந்து விட்டேன்
Reviewed by Tamilan Abutahir
on
நவம்பர் 25, 2017
Rating:

கருத்துகள் இல்லை: